வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தகவல் படி ஞாயிற்றுக்கிழமை வசூலுக்குப் பிறகு பதானின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.550 கோடி ஆகும்.
மும்பை ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.
‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.
4 வருடத்துக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர். முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதன்மூலம் அதிவேகமாக ரூ.400 கோடி வசூலித்த இந்திப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நிலைகுலைந்து வரும் பாலிவுட் திரையுலகிற்கு ‘பதான்’ வசூல், நம்பிக்கையை அளித்திருக்கிறது.
ஜனவரி 27, வெள்ளிக்கிழமை வரை இந்தியாவில் ரூ.166 கோடியும், உலகம் முழுவதும் ரூ.316 கோடியும் வசூலித்து உள்ளது.
மதிப்பீடுகளின்படி, இப்படம் வெளிநாடுகளில் $6 மில்லியனுக்கும் (ரூ. 49 கோடி) வசூலித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது முதல் நாள். ரூ. 57 கோடி வசூல் செய்து முந்திய இந்தொபடங்கள் சாதனையை முந்தியது.
இரண்டாவது நாளில் ரூ. 70 கோடியும், மூன்றாவது நாளில் ரூ. 39 கோடியும் வசூலித்து வார இறுதியில் சனிக்கிழமை ரூ53 கோடியுடன், ஐந்தாவது நாளில் (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 65 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
வார இறுதியில் பதான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இந்தியாவிலேயே ரூ.280 கோடியைத் தாண்டியுள்ளது.
கேஜிஎப் 2 மற்றும் பாகுபலி 2 இன் இந்தி பதிப்பை முறியடித்து, வரலாற்றில் மிக வேகமாக ரூ 200 கோடி கிளப்பில் நுழைந்த திரைப்படம் பதான் ஆகும்.
வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தகவல் படி ஞாயிற்றுக்கிழமை வசூலுக்குப் பிறகு பதானின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.550 கோடி ஆகும்.
இதேபோன்று வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கூட, ஷாருக் கானின் பதான் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. நியூசிலாந்தில் அவதார் தி வே ஆப் வாட்டர் திரைப்படம் 7 வார வசூல் 7.41 லட்சம் அமெரிக்க டாலராக உள்ளது.
முதல் இடத்திலும் உள்ளது.
ஆனால், பதானின் முதல் வார வசூல் மட்டுமே 5.93 லட்சம் அமெரிக்க டாலருடன் டாப் 10 பட வசூல் வரிசையில் 2-வது இடம் பிடித்து உள்ளது.
ஆஸ்திரேலியாவிலும் பதான் படம் உலக அளவிலான வசூலில் 2-வது இடத்தில் உள்ளது.
இதில், அவதார் தி வே ஆப் வாட்டர் திரைப்படம் 7 வார வசூல் 32.53 லட்சம் அமெரிக்க டாலருடன் டாப் 10 வரிசையில் முதல் இடத்தில் உள்ளது இதற்கடுத்து 2-வது இடத்தில் 22.14 லட்சம் அமெரிக்க டாலருடன் டாப் 10 பட வசூல் வரிசையில் பதான் திரைப்படம் உள்ளது.
வடஅமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்தி திரைப்படங்களில் தொடக்க நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் வரிசையிலும் பதான் படம் முதல் இடத்தில் உள்ளது.