டாப் 10 கோடீஸ்வரர் பட்டியலிலிருந்து வெளியேறி, 14வது இடத்திற்கு பின்தங்கிய அதானி, 10வது இடத்திலிருந்த தொழிலதிபர் அம்பானி 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
புதுடெல்லி, அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை நோக்கி வருகிறது. இந்தநிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
10-வது இடத்தில் இருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சொத்து மதிப்பு சரிவால் பணக்காரர்கள் பட்டியலில் ஒரே வாரத்தில் 3-வது இடத்திலிருந்து 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதானி குழும பங்குகளின் சரிவால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் மளமளவென சரிந்துள்ளது.