இன்று ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்றும் போது ஆளுங்கட்சியின் 112 உறுப்பினர்களில் 109 பேர் மாத்திரமே பிரசன்னமாகியிருந்தமை விசேட நிகழ்வாகும்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த 13 பேர் இன்று சபைக்கு வரவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உரையை புறக்கணித்துள்ளதுடன், டலஸ்-விமல் குழுவினர் ஜனாதிபதி உரையை ஆரம்பித்த போது சபையை விட்டு வெளியேறியதை காணமுடிந்தது.
இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் உட்பட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதியின் உரையை செவிமடுத்துக் கொண்டிருந்தனர்.