சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் டைரக்டர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு அவர் நயன்தாராவை வைத்து இயக்கிய நானும் ரவுடி தான் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.
2018ல் வெளியானது இப்படம். விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ரெண்டு காதல். கடந்த ஆண்டு மே மாதம் அஜித்தின் படத்தை இயக்க கமிட்டாகியிருந்தார் விக்னேஷ் சிவன்.
அதன்பிறகு 8 மாத இடைவெளிக்குப் பிறகுதான் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தார். அஜித் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்ற உற்சாகத்தில் இருந்தார் விக்னேஷ் சிவன்.
கடவுள் அருளால் கனவுகள் அனைத்தும் நனவாகும். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி அஜித் சார். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று விக்கி பதிவிட்டு இருந்தார்.
இந்த 8 மாத இடைவெளியில் அஜித் படத்திற்காக விக்னேஷ் சிவன் தயாரித்த ஸ்கிரிப்ட் அஜித்தை வைத்து ஏகே62 என மாற்றப்பட்டது. இந்த கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பை தொடங்கும் முன்பே லைக்கா நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், படம் 2020 இல் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால், படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படத்தை ரத்து செய்ததாக லைகா நிறுவனம் அறிவித்தது.
இதே நிலைதான் இப்போது ஏகே62 படத்திற்கும் வந்துள்ளது. 200 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க லைக்கா திட்டமிட்டிருந்தது, ஆனால் விக்னேஷ் சிவன் கதை திருப்திகரமாக இல்லாததால் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை டைரக்டராக்கி உள்ளனர்.
இதனால் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏகே 62 படம் குறித்து தான் ஷேர் செய்திருந்த பதிவுகளை நீக்கிய விக்னேஷ் சிவன், கவர் போட்டோவாக வைத்திருந்த அஜித்தின் படத்தையும் நீக்கினார். இதன்மூலம் ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியானது.
நயன்தாராவுக்கும் அஜித்துக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இருவரும் பில்லா, ஆரம்பம், விசுவாசம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர். அஜித் சொல்வதைக் கேட்பார் என்று நம்பிய நயன்தாரா பிரச்சனையைத் தீர்க்க முயன்றார் ஆனால் முடியவில்லை.
இதனால் எந்த சூழ்நிலையிலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன் என்று அவர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தனது கணவருக்கு ஆசைக்காட்டி கடைசி நேரத்தில் வாய்ப்பை பறித்துக்கொண்டு மோசம் செய்ததாக நடிகர் அஜித் மீது நயன்தாரா அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியானது.
விக்னேஷ் சிவனின் ஒரு வரியைக் கதையை கேட்டதும் அஜித் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முழுக்கதையும் கேட்டதும் அதில் அவருக்கு திருப்தி இல்லை. இதனால் அதில் இருந்து விலகி உள்ளார்.
ஒரு வரியை கேட்டு முடிவெடுக்கும் பழக்கத்தை அஜித் மாற்றிக் கொண்டால் நன்றாக இருந்திருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது நயன்தாராவின் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது