பிரபாகரன்… அவர் தப்பிச் செல்லும் கோழை அல்ல சீமான்

போர் முடிந்து, ஒரு பேரழிவை சந்தித்துவிட்ட பிறகு, 15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கியிருந்து, பத்திரமாக இருந்துகொண்டு எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பிரபாகரன் தொடர்பான கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் பகிர்ந்த தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னிடம் பதில் இல்லை. சில கேள்விகள்தான் இருக்கின்றன. அதை உங்களிடம் கேட்கிறேன். என் தம்பி சின்னவன் பாலச்சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பத்திரமாக தப்பிச் சென்றிருப்பார் என்று நினைக்கிறீர்களா?

எந்தச் சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று கூறி வீரமாக நின்று சண்டை செய்தவர் எங்கள் அண்ணன். தன்னுயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிச் செல்கின்ற கோழை என்று நீங்கள் நினைக்கிறீர்களா எங்கள் அண்ணனை?

போர் முடிந்து, ஒரு பேரழிவை நாங்கள் சந்தித்துவிட்டப்பிறகு, 15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கியிருந்து, பத்திரமாக இருந்துகொண்டு எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

போர் முடிந்து, ஒரு பேரழிவை சந்தித்துவிட்ட பிறகு, 15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கியிருந்து, பத்திரமாக இருந்துகொண்டு எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பிரபாகரன் தொடர்பான கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் பகிர்ந்த தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னிடம் பதில் இல்லை. சில கேள்விகள்தான் இருக்கின்றன. அதை உங்களிடம் கேட்கிறேன். என் தம்பி சின்னவன் பாலச்சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பத்திரமாக தப்பிச் சென்றிருப்பார் என்று நினைக்கிறீர்களா?

எந்தச் சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று கூறி வீரமாக நின்று சண்டை செய்தவர் எங்கள் அண்ணன். தன்னுயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிச் செல்கின்ற கோழை என்று நீங்கள் நினைக்கிறீர்களா எங்கள் அண்ணனை?

போர் முடிந்து, ஒரு பேரழிவை நாங்கள் சந்தித்துவிட்டப்பிறகு, 15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கியிருந்து, பத்திரமாக இருந்துகொண்டு எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்தத் தகவலை இலங்கை அரசு மறுத்துள்ளது.

Related posts