நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார்.
ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படத்துறை குறித்த படிப்பை படித்து வருகிறார்.
அவர் தனது நண்பர்களுடன் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.
குறும்படம் ஒன்றையும் இயக்கிவருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சஞ்சய் படிப்பை முடித்தவுடன் பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
தந்தை நடிகராக இருந்தாலும், தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரைப் போல் இயக்குவதில் ஆர்வம் கொண்டவர் சஞ்சய்.
இவர் தனது முதல் படத்தை தனது தந்தை விஜயை வைத்து இயக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய சஞ்சய் நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
நடிகர் சூர்யாவை வைத்து ‘சூரரை போற்று’ படத்தை இயக்கியவர் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் கதையை திரைப்படமாக எடுக்க சுதா கொங்கரா முன்பு முடிவு செய்திருந்தார்.
இதற்காக நடிகர் சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சுதா கொங்கரா இப்போது வித்தியாசமான கதையை எழுதி வருகிறார்.
இந்தப் படம் பிரபல எழுத்தாளர் நரணின் ‘வேட்டை நாய்கள்’ நாவலைத் தழுவி எடுக்கப்படுவதாகவும், மிக விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இந்த நாவலைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சஞ்சய் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக இருப்பார் என்பதை மனதில் வைத்து சுதா கொங்கரா… படம் குறித்து விஜய்யிடம் நேரடியாக பேசியதாகவும், சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய் நடிக்காவிட்டாலும் அவரது மகனை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்.
சஞ்சய்க்கு இயக்குநராக ஆசை. அவருடைய ஆசைக்கு நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.
அதனால் சஞ்சய் இந்த படத்தில் நடிக்கிறாரா என்று கேளுங்கள், அவர் ஒப்புக்கொண்டால் எனக்கு ஆட்சேபனை இல்லை என விஜய கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த கதையை விரைவில் சஞ்சய்யிடம் நேரிலோ அல்லது போனிலோ சுதா கொங்கரா பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
அவர் ஒப்புக்கொண்டால் அவருடன் படம் பண்ண சுதா கொங்கரா முடிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் சஞ்சய் நடிக்க ஒப்புக்கொண்டால், அவரது மகனும் தளபதிக்கு போட்டியாக வருவார் என கூறப்படுகிறது.