தபால் வாக்குப் பத்திரத்தை அச்சடிக்க பணம் ஒதுக்குவதில்லை என முடிவு செய்ததிலிருந்து மக்களின் இறையாண்மையை கொள்ளையடிக்கும் அரசின் புதிய நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மக்கள் ஆணையற்ற அரசாங்கம் தேர்தலை நடத்த பயந்துபோயுள்ளதோடு, இதன் காரணமாக தேர்தலைஒத்திவைக்கும் சதிகள் இன்னும் முடிந்தபாடில்லை. 22 ஆவது முறையாக தேர்தலை ஒத்திவைக்கும் மற்றொரு கோழைத்தனமான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், தேர்தலை ஒத்திவைப்பதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான கூட்டுச் சதிகள் சட்டத்தின் முன் ஒவ்வொன்றாக தோற்கடிக்கப்பட்டன.
தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரமமைந்த தேவைப்பாடு என்பதோடு, அதை மீற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதையும் வலியுறுத்துகிறோம்.
தேர்தல்கள் ஒத்திவைப்பு தொடர்பாக ஓர் நாடாக நாம் பல இழிவான வரலாற்று நிகழ்வுகளை அனுபவித்துள்ளோம் என்பதோடு, அந்த கருப்பு நிகழ்வுகளை மீண்டும் மேற்கொள்வதற்கான சகல வழிகளும் மூடப்பட வேண்டும்.
தேர்தலை ஒத்திவைக்க சதி செய்யும் அனைவருக்கும் எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் உச்சபட்ச தண்டனையை வழங்குவோம் என தெரிவித்து கொள்கிறோம்.
எனவே, மக்களின் ஜனநாயக உரிமைகளை கடுமையாக மீறும் வகையில் தேர்தலை ஒத்திவைப்பது அல்லது நடத்தாமல் இருப்பது போன்ற கோழைத்தனமான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அனைத்து சக்திகளும் ஏனைய அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரு முகாமில் இணையவேண்டிய நேரம் வந்துவிட்டது.
இது இப்போதைக்கு தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும் என்பதோடு, பைத்தியக்கார அரசாங்கம் மக்களின் இறையாண்மையுடன் விளையாட அனுமதிக்கக் கூடாத தீர்க்கமான தருணம் வந்துவிட்டது என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.