தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி பாராளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபா பணத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளியைச் சேர்ந்த குறித்த இளைஞன் , “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்” என தபால் நிலையம் ஊடாக 500 ரூபா காசுக்கட்டளையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதேவேளை பாதுக்க பிரதேசத்தைச் சோ்ந்த வாக்காளர்கள் சிலர் இணைந்து அண்மையில் தோ்தல் ஆணைக்குழுவுக்கு பணம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.