தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்காமல் இருத்தல் ஆகிய 3 கொள்கை ரீதியான வாக்குறுதிகளின் பிரகாரமே தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ளார் எனவும், மக்கள் ஆணை இன்றி மொட்டுவின் கைப்பாவையாக நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி, வாக்குறுதிகளை மக்களுக்காக முன்வைக்காமல் மொட்டு உறுப்பினர்களுக்கு மாத்திரமே இத்தகைய வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (21) நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் ஆணையும், மக்கள் நம்பிக்கையும் இல்லாத இந்த அரசாங்கத்திடம் தான்றோன்றித்தனமான அரசியலில் ஈடுபட்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்றும், மக்களின் தேர்தல் உரிமையில் தலையிட்டால் அதற்கு எதிராக வீதியில் இறங்குவோம் என்றுமே கூறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்தத் தேர்தல் உரிமையை ஒத்திவைக்க ஆதரவளித்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
—–
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வவுகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இன்று காலை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினை யாழ் ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் போது எதிர்க்கட்சி தலைவரினால் நினைவு பரிசில் ஒன்றும் யாழ் ஆயரிடம் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நல்லை ஆதீனத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகனையும் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் போது யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பிரபல பெண்கள் கல்லூரிகளுக்கு பேருந்து வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளதாகவும் இந்து மாமன்றத்தில் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
அனலைதீவிலும் மாலை 2 மணிக்கு சண்டிலிப்பாயிலும் மாலை 4 மணிக்கு வட்டுக்கோட்டை மூளாயிலும் மாலை 5 மணிக்கு அளவெட்டி கும்பலையிலும் மாலை 06.30 மணிக்கு றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டங்களிலும் சஜித் பிரேமதாச கலந்து கொள்கின்றார்.
நாளை வெள்ளிக்கிழமை (24) காலை 9.30 நாச்சிகுடா சந்தி 10.30 மணிக்கு கிளிநொச்சியிலும் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்வுள்ளார்.