இது தொடர்பில் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹண லியனகே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் சதியின் ஒரு பகுதியே இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினராலும் தமக்கு கோரிக்கையோ, அழுத்தமோ விடுக்கப்படவில்லை எனவும் அதில் சுட்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவு கோரியதாக சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண நேற்றையதினம் (25) தெரிவித்திருந்தார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கமே வீடு செல்ல வேண்டும், அதனை விடுத்து பிரதமரை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என சுட்டிக்காட்டினார்.
சுதந்திர மக்கள் கூட்டணியின் எந்தவொரு உறுப்பினரும் பிரதமரை மாற்றும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
தற்போதைக்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருப்பதே பொருத்தமானது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.