இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட பணட வரியை 20 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வரி திருத்தம் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட புழக்கத்தில் இல்லாத நினைவு நாணயத்தை விற்பனை செய்ய மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.