ராஜபக்ஷக்களுக்கு இரண்டு முக்கிய பதவிகள் !

சர்வதேச உறவுகள் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும், நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, பாராளுமன்றத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை பெருமைக்குரியதாகும்.

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொது நிர்வாகம், தணிக்கை நிறுவனங்கள் குறியீடு, பண விதிமுறைகள், பொது நிதி, பொது வருவாய் மேலாண்மை ஆகியவற்றில் ஏறக்குறைய இருபத்தைந்து வருட அனுபவமுள்ள ஒரு தொழில்முறை.

இதேவேளை, எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் குழுவின் தலைவராக நாலக பண்டார கோட்டேகொடவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான துறைசார் குழுவின் தலைவராக புத்திக பத்திரனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts