‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான படம் “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்”. இந்தப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று உலக அரங்கில் சாதனை படைத்துள்ளது. அதன்படி சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை படத்தில் நடித்த மிஷெல் யோ (Michelle Yeoh) வென்றுள்ளார்.
டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இருவரும் சிறந்த இயக்குநர்களுக்கான விருதை பெற்றுள்ளனர். சிறந்த படத்தொகுப்புக்கான விருதை பால் ரோஜர்ஸ் பெற்றுள்ளார். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட 7 விருதுகளைப் பெற்று இந்த படம் மிரட்டியுள்ளது.
—–
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தி வேல்ஸ் (The Whale) திரைப்படத்திற்காக பிரெண்டன் பிரசர் (Brendan Fraser) வென்றார்.
—–
சிறந்த தழுவிய திரைக்கதைக்கான (Adapted Screenplay) ஆஸ்கர் விருதை விமன்ஸ் டாக்கிங் (Women Talking) திரைப்படத்திற்காக சாரா பொலி (Sarah Polley) வென்றார்.
—–
சிறந்த காட்சி அமைப்புக்கான (Visual Effects) ஆஸ்கர் விருதை ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ (Avatar: The Way of Water) படம் வென்றது. இந்த படத்தின் காட்சி அமைப்பாளர்கள் ஜோ லெட்டரி, ரிச்சட் பனிஹம், எரிக் சைண்டான் மற்றும் டேனியல் பெரிட் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றனர்.
—–
சிறந்த வெளிநாட்டு திரைப்பட பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) திரைப்படத்திற்காக வால்கர் பிர்டெல்மென் வென்றார்.
——-
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான (Production Design) ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front ) படத்திற்காக கிறிஸ்டின் எம் கோல்ட்பெக் மற்றும் எர்னிஸ்டன் ஹிம்பர் வென்றனர்
—–
சிறந்த அணிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி பாய், தி மொலி, தி பாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்’ (The Boy, the Mole, the Fox and the Horse) படத்திற்காக சார்லி மெகிசி மற்றும் மேதிவ் பிரிடு வென்றனர்.
——
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை ‘பிளாக் பேந்தர்ஸ்: விஹண்டா பார்எவர்’ (Black Panther: Wakanda Forever) படத்திற்காக ரூத் கார்டர் வென்றார்.
——
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான (Best Makeup and Hairstyling) ஆஸ்கர் விருதை தி வேல்ஸ் (The Whale) படத்திற்காக அட்ரின் மொரொட், ஜூடி சின், அனிமேரி பிராட்லி வென்றனர்.
——-
சிறந்த ஒளிப்பதிவுக்கான (Best Cinematography) ஆஸ்கர் விருதை ‘ஆல் குயிண்ட் ஆன் தி வெஸ்ட்டர்ன் பாண்ட்’ (All Quiet on the Western Front) படத்திற்காக ஜேம்ஸ் பிரண்ட் வென்றார்.
——
* சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை குஹ்லிர்மொ டில் டோரோஸ் பினோஷியோ ( Guillermo del Toro’s Pinocchio) வென்றது.
—–
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘அன் ஐரிஷ் குட்பாய்’ (An Irish Goodbye) குறும்படம் வென்றது
——
சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருந்தை ‘நவல்னி’ (Navalny) வென்றது
——