சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு விழா. சின்னக்கலைவாணர் விவேக் பேசினார். “ஆண் குரலில் யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆண்மை குரலில் ஒருவரால்தான் பாட முடியும். அவர்தான் டி.எம்.சவுந்தரராஜன்” என்றார். மென்மையான குரல்வளம்தான் எடுபடும் என்று சினிமா உலகில் நம்பப்பட்டதை ஒரு கணீர் குரல் தவிடு பொடியாக்கி, தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுகளாக கோலோச்சியது. பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்தான், அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவரது உருவத்துக்கும், குரலுக்கும் சம்பந்தம் இருப்பது போல் தெரியாது. ஆனால், அவரிடம் இருந்தா இப்படிப்பட்ட பாடல்கள், அழகிய தமிழ் உச்சரிப்புடன் வந்துள்ளன என இப்போது உள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டு வாயடைக்கிறார்கள். இன்று டி.எம்.சவுந்தரராஜனின் 100-வது பிறந்த நாள். அவரது நூற்றாண்டு விழாவை ரசிகர்கள் கொண்டாடும் இந்த நேரத்தில் அவரைப்பற்றி அரிய தகவல்களை இங்கே நாம் அசை…