அண்மையில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டிய ஒருவர் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக பெரும்பங்கு ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
எவ்வாறாயினும், இந்த பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாகவும், அதனை மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
ஜனாதிபதி வேட்புமனு பற்றி பேசுவதற்கு இது எனவும் அந்பொருத்தமான நேரமல்ல என்றும் குறித்த நபரை பொதுஜன பெரமுன வேட்பாளராக குறிப்பிட முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .