கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதல்-அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசு தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் சட்டப்பேரவையில் உள்ள கவர்னர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்தும் தீர்மானம்.
கவர்னருக்கு எதிரான தீர்மானத்துக்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையின் கதவுகள் மூடி, எண்ணி கணிக்கும் குறியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எம்.எல்.ஏக்களின் பகுதி வாரியாக முறைப்படி நடைப்பெற்றுது.
வாக்கெடுப்பின் இறுதியில் 144 பேர் கவர்னருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரித்து வாக்களித்தனர். 2 எம்.எல்.ஏக்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். நடுநிலை யாரும் வகிக்கவில்லை.
ஆதலால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமரும் பகுதி 6-ல் யாரும் இல்லை. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று சட்டசபைக்கு வரவில்லை.
சட்டசபை விதிகளில் உள்ள கவர்னர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
அது தொடர்பான விவாதத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.