கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு முக்கிய திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடார் அண்ணாமலை அவர் கூறியதாவது:- சாமானியனாக நான் கேள்வி கேட்கவுள்ளேன்; ஒருவாரம் நான் சொன்னதை ஆராயுங்கள் .
முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால், அரசியலில் எனக்கு ரூ.7-8 லட்சம் மாதத்திற்கு செலவாகிறது. என் உதவியாளர்களுக்கான ஊதியத்தை என்னுடன் படித்த நண்பர்களே கொடுக்கின்றனர்.
வீட்டு வாடகை, ஊழியர்கள், சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள்தான் தருகிறார்கள்எனது வங்கி கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் வெளியிடுகிறேன் எம்பிஏ படித்தபோது வாங்கிய 11 லட்ச ரூபாய் கடனை 7 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கட்டினேன் இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் மட்டுமே விற்றுள்ளது; அதில் ஒரு வாட்ச்-ஐ நான் வைத்திருக்கிறேன் இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் விற்கப்பட்டுள்ளது; ஒன்றை கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் வாங்கினார்; மற்றொன்று மும்பையைச் சேர்ந்தவர் வைத்துள்ளார். கோவை ஜிம்சன் எனும் நிறுவனத்தில் ரபேலின் 2ஆவது வாட்ச் விற்பனை செய்யப்பட்டிருந்தது; மே 27ஆம் தேதி வாங்கினேன் 2021 மார்ச் மாதத்தில் சேரலாதன் எனும் கேரளாவை சேர்ந்த நபருடைய வாட்ச் இது; அவரிடமிருந்து இந்த வாட்சை வாங்கினேன் நான் காவல்பணியில் ரபேல் வாட்சை லஞ்சமாக வாங்கவில்லை; மார்ச் மாதம் வாங்கியவர், மே மாதத்தில் என்னிடம் கொடுத்தார். என கூறினார்.