உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பாராளுமன்றத்தில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதியை நீதியமைச்சர் சந்திக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டத்தில் எவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவே ஜனாதிபதியை நீதியமைச்சர் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், எனினும், எவ்வாறான மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பது தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை. பாராளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதும், அனைத்துக் கரிசனைகளிற்கும் தீர்வைக் காண முடியும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.