2024 — 34 காலப்பகுதிக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்குமென, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கு விண்ணபிப்பதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் சேவைப்பிரிவின் ஆசிய பசுபிக்கின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனியுடன், கடந்த திங்கட்கிழமை இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
——-
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கை வருகிறது. கொழும்பிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம், இவ்வாண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட முதல் மீளாய்வுப் பணிக்கு கூடவுள்ளது.
இதற்கு முன்னரான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் குழு இன்று வருகிறது. இக்குழு, மே 11 முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளார்.சர்வதேச நாணய நிதிக் கடன் தொடர்பிலான முதலாவது மீளாய்வு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ளது. இதன் நிமித்தம் பிரதிநிதிகள் வழமையான கலந்தாலோசனைகளுக்காக இவ்வாறு இலங்கை விஜயம் செய்ய உள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய வலய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் இந்த பிரதிநிதிகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.