மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘2018’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.93 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் ரூ.100 கோடி வசூலை எட்ட உள்ளது.
ஜூட் அந்தனி ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘2018’ பாக்ஸ் ஆபீஸிலும் ‘மாஸ்’ காட்டி வருகிறது. இன்றும் கேரளாவில் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை ரூ.93 கோடியை வசூலித்துள்ளது. வெறும் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 4 மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது. கேரளாவில் மட்டும் படம் ரூ.40 கோடியை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சௌபின் ஷாயிர் நடிப்பில் உருவான ‘ரோமாஞ்சம்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது.