ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கு ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று பப்புவா நியூகினியா நாட்டிற்கு சென்றார்.
தீவு நாடான பப்புவா நியூகினியாக்கு பிரதமர் மோடி நேற்று இரவு சென்ற நிலையில் பப்புவா நியூகினியா பிரதமர் ஜேம்ஸ் மரேப் விமான நிலையத்திற்கே நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
அப்போது, பிரதமர் மோடியை காலை பிடித்து வணங்க ஜேம்ஸ் மரேப் முயற்சித்தார். அவரை தடுத்து நிறுத்திய பிரதமர் மோடி அவர் முதுகை தட்டிக்கொடுத்தார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து காரில் பிரதமர் மோடி புறப்பட்டார்.
இந்நிலையில், 14 பசுபிக் தீவுகளின் நாடுகள் மற்றும் இந்தியா பங்கேற்ற மாநாடு பங்கேற்றது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகில் தற்போது எரிபொருள், உணவு, உரம், மருந்து பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாம் நம்பியவர்கள் தேவை ஏற்படும்போது நமக்கு ஆதரவு அளிக்கவில்லை’ பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர்கள், ஏழ்மை, சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்கன்வே உள்ளன. தற்போது புதிய பிரச்சினைகளும் உருவெடுத்து வருகிறது.
இந்த சவாலான சூழ்நிலையில் இந்தியா அதன் நட்பு நாடுகளான பசுபிக் தீவு நாடுகளுடன் உறுதுணையாக நிற்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.