‘ஆதிபுருஷ்’ படத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு.!

பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஓம் ராவத் இயக்கத்தில், ராமாயணம் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் கடந்த 16ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தை, மராட்டிய மாநிலம் நலசோபர பகுதியில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸில் திரையிட்டபோது, திரையரங்கிற்குள் நுழைந்த இந்து அமைப்பினர் படத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி திரையிடலை நிறுத்தினர்.

இந்துக்களை புண்படுத்தும் வகையிலான வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறி, திரையரங்க ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் “ஆதிபுருஷ் படத்தில் ராமர், அனுமனை விடியோ கேம் கதாபாத்திரம் போல சித்தரித்தும் அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பது உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது.

சனாதன தர்மத்தை அவமதிக்கு இந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts