உன்னத மனிதர் பெருந்தலைவர் காமராஜர் – மோடி

முன்னாள் முதல்-அமைச்சர் கர்ம வீரர் காமராஜரின் 121வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் காமராஜரின் புகைப்படம், உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த உன்னத மனிதர் காமராஜருக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன்.
சமூக அதிகாரமளிப்புக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாக உள்ளது.
வறுமை ஒழிப்பு மற்றும் பொது நலன் குறித்து அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்’ என பதிவிட்டுள்ளார்.

——

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான செலவினங்களைப் பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியிலிருந்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts