ஆஸ்கருக்கு பிறகு எனக்குள் எந்த மாற்றமும் இல்லை. முன்பு இருந்த மாதிரியே இருக்கிறேன் ஆஸ்கர் விருது வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பல ஆண்டுகளாகவே வித்தியாசமான இசையின் முகவரியாக இருந்து வருகிறார்.
அவரது பாடல்கள் வெளியான உடனேயே அனைத்து ரசிகர்களையும் சென்றடைகிறது. இசை அனுபவங்கள் குறித்து ஏ.ஆர்.ரகுமான் அளித்துள்ள பேட்டியில், “ஆஸ்கருக்கு பிறகு எனக்குள் எந்த மாற்றமும் இல்லை.
முன்பு இருந்த மாதிரியே இருக்கிறேன். ஆனால் கவுரவம் அதிகமானது.
நமது இசை அதிகமான மக்களை சென்றடைந்தது. நெருக்கடி வந்ததா? என்று கேட்டால் அது என்னிடம் இருந்துதான் வரும்.
அடிக்கடி புதிய சப்தம், புது பாணிகளை கொடுக்க முயற்சி செய்து கொண்டே இருப்பேன். இவ்வளவு தூரம் பயணித்தீர்கள்.
இத்தனை படங்கள் செய்துள்ளீர்கள் என்று நிறையபேர் எனக்கு ஞாபகப்படுத்துவார்கள்.
ஆனால் என் உண்மையான பயணம் இப்போதுதான் ஆரம்பமானது என்ற எண்ணத்தில்தான் இருக்கிறேன்.
ரோஜா படத்தில் இருந்து பான் இந்தியா படங்களுக்கு வேலை செய்வது எனக்கு பழக்கம் ஆகி விட்டது.
இசையில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மெலடி இசையில் இருக்கும் அழகு அப்படியேதான் இருக்கும்.
நான் நம்பும் பார்முலா ஒன்றுதான். பாடல் எளிமையாகவும், கவரும் வகையிலும் இருக்க வேண்டும்.
தாளமும், இசைக்கோர்ப்பும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்” என்றார்.