இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி உடன் மூடப்படவுள்ளதக, தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் மலைதீவுக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஜொரன்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal) தனது ட்விட்டர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல், இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான தொடர்பை இந்தியாவின் புதுடெல்லியிலுள்ள தூதரகம் மேற்கொள்ளுமென அவர் அறிவவித்துள்ளார்.
இது தொடர்பில் @norwayinindia ட்விட்டர் தளத்தில் தகவல்கள் பகிரப்படும் எனவும், இலங்கைக்கான தற்போதைய ட்விட்டர் கணக்கு @NorwayAmbLK இயங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஜூலை 19ஆம் திககதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பிரியாவிடை சந்திப்பை மேற்கொண்டதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நோர்வேக்கு அவர் அளித்த அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், சிறந்த, வலுவான இருதரப்பு உறவுகள் சக ஊழியர்கள் மூலம் தொடர்வதை ஜனாதிபதியிடம் உறுதி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.