ஒரு நாட்டிற்கு சாதகமாக நடந்துகொண்டால் முழு கடன்மறுசீரமைப்புநடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என இந்தியாவிற்கான ஜப்பான் தூதுவர் ஹிரோசி சுசுஹி தெரிவித்துள்ளார்
பாத்பைன்டர்அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்தியா ஜப்பான் இலங்கை மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
ஒரு நாட்டிற்கு சாதகமாக நடந்துகொண்டால் முழு கடன்மறுசீரமைப்பு செயற்பாடுகளும் பாதிக்கப்படும்,
இலங்கை எந்தநாட்டிற்கும் விசேடமான முக்கியத்துவத்தை கொடுக்காது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
ஜப்பான் இதனை வரவேற்றுகின்றது.
அனைத்து கட்சிகளின் பங்குபெற்றுதல் உடனான வெளிப்படையான சமத்துவமான கடன் மறுசீரமைப்பிற்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றோம்.
இந்தியாவின் நிதி உத்தரவாதங்களே இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தின.
ஜப்பான் பிரதமர் தெற்காசியாவை சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோபசுபிக் குறித்த விடயத்தில் முக்கிய தூண்களில் ஒன்றாக முன்னிலைப்படுத்தினார்.
ஜப்பான் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மிகுந்த முக்கியத்துவத்தை வழங்குகின்றது இந்த இரு நாடுகளும் தவிர்க்க முடியாத சகாக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.