கலைஞரை போன்று பிரபாகரன் மீதும் பாசம் கொண்டிருந்தேன்.என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
. கலைஞரை போன்று பிரபாகரன் மீதும் பாசம் கொண்டிருந்தேன். படகில் சென்று விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது திமுகவிற்கும் வைகோ பிரபாகரனை சந்திப்புக்கும் தொடர்பு இல்லை என அறிக்கை வெளியிட்டனர். இதன்பின் என்னை கட்டாயப்படுத்தி பிரபாகரன் அனுப்பினார். அப்போது ஒரு கடிதம் ஒன்றை கலைஞருக்கு அவர் கொடுத்து அனுப்பினார். கடிதத்தை கலைஞரிடம் கொடுத்த போது என்ன தான் பற்று இருந்தாலும் உயிரை வெறுத்து சென்றிருக்கக் கூடாது என கலைஞர் என்னிடம் கூறினார்.என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் பாஜகவை தடுக்கவே திமுகவுடன் கரம் கோர்த்துள்ளோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
மதுரையில் மதிமுக சார்பில் அண்ணாவின் 115வது பிறந்தநாள் மாநாடு நடக்கிறது. இதையொட்டி அக்கட்சியின் மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம் தெப்பக்குளம் பகுதியில் நேற்று நடந்தது. புதூர் பூமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட செயலர்கள் முனியசாமி மாரநாடு தொழிற்சங்க மாநில நிர்வாகி மகப்பூஜான் உள்ளிட்ட மதுரை மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: கட்சி தொடங்கி 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. அண்ணா கலைஞர் நாவலர் உள்ளிட்டோர் உரைகளை கேட்டு வளர்ந்தவன் நான். கல்லூரி மாணவராக இருந்தபோது திமுகவில் என்னை ஒப்படைத்தேன். எனது பேச்சை கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர் அழைத்தும் செல்லவில்லை. அண்ணாவின் படையில் சேர்ந்து விட்டேன் என மறுத்தேன். கலைஞரின் உற்ற தம்பியாக இருந்தேன். திமுகவில் முழுமையாக இணைத்துக்கொண்டு பணியாற்றினேன்.
2 ஓட்டு வாங்கி தோற்றாலும் வெற்றி பெற்றாலும் திமுகவில் போட்டியிடுவேன் என உறுதி இருந்து தேர்தலில் போட்டியிட்டு 8 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவன். திமுகவில் இருந்தபோது 23 முறை சிறை சென்றிருக்கிறேன். வைகோ என்ற இரு எழுத்து பீரங்கியைவிட பெரியது என பாராட்டிய கலைஞரின் கண்ணீரில் பிறந்தது என் மீதான பாசம். காலையில் எழுந்தால் கலைஞர் வீட்டுக்கு செல்வேன். இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளை சொல்ல முடியும்.
இதெல்லாம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாது. கலைஞரை போன்று பிரபாகரன் மீதும் பாசம் கொண்டிருந்தேன். படகில் சென்று விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது திமுகவிற்கும் வைகோ பிரபாகரனை சந்திப்புக்கும் தொடர்பு இல்லை என அறிக்கை வெளியிட்டனர். இதன்பின் என்னை கட்டாயப்படுத்தி பிரபாகரன் அனுப்பினார். அப்போது ஒரு கடிதம் ஒன்றை கலைஞருக்கு அவர் கொடுத்து அனுப்பினார். கடிதத்தை கலைஞரிடம் கொடுத்த போது என்ன தான் பற்று இருந்தாலும் உயிரை வெறுத்து சென்றிருக்கக் கூடாது என கலைஞர் என்னிடம் கூறினார்.
இதன்பின் திமுஎகவில் இருந்து நீக்கப்பட்டேன். 5 பேர் தீக்குளித்து உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மதிமுக பிறந்தது. கலைஞரின் உடல்நிலை பாதித்தபோது சனாதன சக்திகள் அதிகரித்தன. இவர்களை எதிர்ப்பது நமது வேலை என நினைத்து திமுகவில் மீண்டும் இணைந்தேன். வாஜ்பாய் என்மீது உயிரை வைத்திருந்தார். திமுகவை அழிக்க ஆளுநரை கொண்டுவந்து வைத்துக் கொண்டு பாஜக செயல்படுகிறது. 20 ஆண்டு திமுகஇ 30 ஆண்டு மதிமுக என 50 ஆண்டு அரசியலில் கடந்துவிட்டது. என்னுடன் இருந்த இளைஞர்கள் வயது முதிர்ந்து விட்டனர்.
திமுகவில் நீக்கிய பிறகு 1994ல் தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் செய்தேன். வசதியாக விடுதிகளில் தங்கவில்லை. சாலைகளில் தூங்கினேன். ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்தேன். நீதிமன்றம் மூலமும் ஆலைக்கு எதிராக வாதிட்டேன். ஆலை நிர்வாகமே சந்திக்க முயன்றபோது மறுத்தேன். மதிமுக நேர்மையில் தியாகத்தில் பூர்த்த நெருப்பு. தேனி மாவட்டத்தில் நீயூட்ரினோவை எதிர்த்து போராடி தடை பெற்றேன். இத்திட்டத்தை கொண்டுவர மோடி முயன்றார். முல்லை பெரியாறு அணையை காப்பாற்ற முயன்றேன்.தஞ்சாவூர் மீத்தேன் திட்டத்தை தடுத்தோம்.
10 ஆண்டுகளுக்கு முன் பாஜக மக்களுக்கு தெரியாது. மோடி அமித்ஷாவை வைத்து தமிழ்நாட்டில் வந்துவிடுவோம் என்ற தைரியம் பாஜகவுக்கு எப்படி வந்தது. இதுபோன்ற சூழலில் திமுகவுடன் கைகோர்ப்பது தவறில்லை. தமிழ்நாட்டில் பாஜகவை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் திமுகவுடன் கரம் கோர்த்துள்ளோம்.
இன்றைக்கு நடைபயணத்திற்கு பக்கம் பக்கம் விளம்பரம் வருகிறது. விடுதலைப்புலிகளை ஆதரித்தால் ஓராண்டு சிறை சென்றேன். இன்னும் ஓராண்டில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்படியே தண்டனை வந்தாலும் ஏற்க தயாராகி உள்ளேன். உங்களால் தான் நான். உங்களது வியர்வையில் நனைந்த பணத்தை இயக்கத்திற்கென கொடுத்தவர்கள் பூஜைக்குரியவர்கள் நமது தொண்டர்கள்.
எனது வீட்டில் இருந்து அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கவில்லை. என்னை பற்றி செய்தி வெளியிடவில்லை என எனது மனைவியின் அண்ணன் மகன் தீக்குளித்து இறந்தான். எனது அரசியல் வாழ்க்கை சம்பவத்தை கேட்டு அதிர்ந்துள்ளீர்கள். மதுரை மதிமுக மாநாடு சிறப்பாக நடக்கவேண்டும். பணம் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். திமுகவை பாதுகாக்க வேண்டும். இதற்காக பாடுபடுங்கள். போராடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்