சீன கப்பலிற்கு அனுமதி வழங்குமாறு சீன தூதரகம் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து இலங்கை அரசாங்கம் இன்னமும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் இராஜதந்திர பிரிவின் இயக்குநர் பிரியங்க விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார்.
இந்தியா சீனா பதற்றம் மீண்டும் தலைதூக்கியுள்ளதுடன் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் நடுநிலை தன்மையை சோதிப்பதாகவும் சீனாவின் சின் யான் 6 ஆராய்ச்சி கப்பலிற்கு அனுமதியளிப்பதா என்ற விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தலைவலியை ஏற்படுத்துவதாகவும் மாறியுள்ளது.
இன்னும் உறுதிசெய்யப்படாத திகதியில் -சீன கப்பலிற்கு அனுமதி வழங்குமாறு சீன தூதரகம் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து இலங்கை அரசாங்கம் இன்னமும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் இராஜதந்திர பிரிவின் இயக்குநர் பிரியங்க விக்கிரமசிங்க சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.
இந்த வேண்டுகோள் தொடர்பில் வழமையான இராஜதந்திர நடைமுறைகளை அமைச்சு பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீன கப்பல் ஒக்டோபர் 25 ம் திகதி இலங்கை வரவுள்ளது நவம்பர் 11 ம் திகதி கப்பல் இலங்கையில் தரித்துநிற்கும் என இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது அனுமதி வழங்கப்படுகின்றதா என்பதை பொறுத்தவிடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக முன்னர் வழமையான துறைமுக விஜயங்களாக காணப்பட்டவை தற்போது சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அரசாங்கம் நெருக்கடியான நிலையில் உள்ளது என முன்னாள் இராஜதந்திரியொருவர்தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீன கப்பலின் வேவுபார்க்கும் திறன் குறித்த இந்தியாவின் கரிசனைகளை நிராகரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
4000 தொன் ஆழகடல் ஆராய்ச்சிக்கப்பல் புவிஇயற்பியல் மேற்கொள்ளக்கூடியது மேலும் கடலியல் கடல் சூழலியல் புவியியல் ஆகியவற்றை படிப்பதுடன் நிலம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கான மாதிரிகளை சேகரிக்ககூடியது.
வெளிநாட்டு கப்பல்களுடன் அறிவியல் கடல்சார்வியல் தொடர்பான ஆராய்ச்சிகளின் மையப்புள்ளியாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் காணப்படுகின்றது.
இது சீனாவிலிருந்துவரும் கப்பல்களுக்கும் பொருந்தும்