நிலவின் தென் துருவத்தை அடையும் நோக்கில் இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை ஏவியுள்ளது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அதேவேளை, விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் வரும் புதன்கிழமை மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.
விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெரும். இந்த சூழ்நிலையில், நிலவில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம் நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நபர் டீ போடுவது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டு , முக்கிய செய்தி நிலவில் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் தற்போது வந்துள்ளது என பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் அவரந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உருவான சந்திரயான் – 3 விண்கலம் நிலவை அடைய உள்ள நிலையில் பிரகாஷ்ராஜ் -ன் செயல் ஒட்டுமொத்த விஞ்ஞானிகளையும், நாட்டு மக்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.