நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு மணந்தார்.
நட்சத்திர காதல் ஜோடியான நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
இதற்கிடையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த படத்திலும் அவர்களது குழந்தைகளின் முகத்தை அவர்கள் காட்டவில்லை.
இந்தநிலையில், முதன்முறையாக நயன்தாரா தன்னுடைய மகன்களான உயிர் மற்றும் உலகம் இருவரின் முகத்தை வெளி உலகிற்கு காட்டி உள்ளார்.
குழந்தைகள் மிகவும் அழகாக உள்ளதாக சமூகவளைதள வாசிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.