ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்தியாவிடமிருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட பின் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசிலின் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு 3 முக்கியத்துவங்களை கொண்டுள்ளது.

1. சமூக ஒன்றிணைப்பு மற்றும் பட்டினிக்கு எதிரான போராட்டம்.

2. ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி.

3. உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவையாகும். ‘நியாயமான மற்றும் நிலையான உலகத்தை கட்டமைத்தலே’ பிரேசில் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பின் பொன்மொழியாகும்.

பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய அணிதிரட்டல் ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட உள்ளன’ என்றார்.

———

டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் இந்தியாவிற்கு வருகை தந்தார். முன்னதாக டெல்லியில் உள்ள சுவாமி நாராயன் அக்சார்தாம் வழிபாட்டுத் தலத்தில் நேற்று ரிஷி சுனக் தனது மனைவியுடன் சென்று வழிபாடு செய்தார்.

தொடர்ந்து ஜி-20 மாநாட்டில் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதையடுத்து இன்று மாநாடு நிறைவடைந்த நிலையில் விமானம் மூலம் ரிஷி சுனக் தனது மனைவியுடன் இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றார். இந்த மாநாட்டின் போது பருவநிலை மாற்றம் தொடர்பான ‘பசுமை பருவநிலை நிதி’ அமைப்பிற்கு இங்கிலாந்து அரசு சார்பில் 20 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று ரிஷி சுனக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

——

டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இந்தியா தலைமையிலான இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், வங்காளதேசம் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

நேற்றைய முதல் நாள் உச்சிமாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன. நேற்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. கூட்டுப்பிரகடனத்தை ஜி20 கூட்டமைப்பின் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

இன்று ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டம் நடைபெற்றது. தற்போது இந்த ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று மதிய உணவின் போது பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் மிகவும் பயனுள்ள மதிய உணவு சந்திப்பு.

நாங்கள் பல தலைப்புகளில் விவாதித்தோம். இந்தியா-பிரான்ஸ் உறவு, முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அளவிடுவதை உறுதிசெய்ய எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.

———

ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று (செப்.10) காலை உலகத் தலைவர்கள் டெல்லி ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று காலை டெல்லி ராஜகாட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு உலகத் தலைவர்கள் வருகை தந்தனர். மழைக்கு நடுவே வருகைதந்த தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, வங்கதேச பிரதமர் ஷேர் ஹசினா, சிங்கப்பூர் பிர்டஹமர் லீ ஸிங் லூங் ஆகியோர் முதலில் ராஜ்காட் வந்தடைந்தனர். காந்தி நினைவிடத்துக்கு வந்த ஒவ்வொரு தலைவரையும் அங்கவஸ்திரம் அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார். காந்தி குடில் பின்னணியில் அவர்களுக்கு பிரதமர் மோடி அங்கவஸ்திரம் அணிவித்தார். பின்னர் தலைவர்கள் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

காந்தி நினைவிடத்தில் செருப்பு அணிவது மரியாதை நிமித்தமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஷூக்களை தவிர்த்து தட்டையான கால் கவசத்தை அணிந்துகொண்டார். பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் தங்கள் ஷூ, சாக்ஸ் ஆகியனவற்றை அப்புறப்படுத்திவிட்டு சென்றனர். அங்கேபக்திப் பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் தலைவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, இன்று மதியம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுடன் உணவு வேளையில் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.

வியட்நாம் புறப்பட்டுச் சென்ற பைடன்: ஹனோய் புறப்பட்ட பைடன்: இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டுச் சென்றார். அங்கே தலைநகர் ஹனோயில் அவர் அந்நாட்டுத் தலைவருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

வியட்நாமுடன் சீனா எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டு வரும் சூழலில் அமெரிக்க அதிபரின் வியட்நாம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

——–

ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையில் 3 நாட்களில் 15 நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவு குறித்தும் பல்துறை ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையில் பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அத்துடன் ஜி20 மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் ஆகியோரையும் பிரதமர் மோடி தனித்தனியாக நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரதமர் மோடி கூறும்போது, ‘‘வங்கதேசம் – இந்தியா இடையே வர்த்தக தொடர்பு, மக்கள் தொடர்பு குறித்து பிரதமர் ஹசீனாவுடன் விரிவாக பேசினேன். இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது’’ என்றார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வங்கதேசம் – இந்தியா இடையே போக்குவரத்தை அதிகரிப்பது, கலாச்சாரம் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்’’ என்று தெரிவித்துள்ளது.

மொரீஷியஸ் பிரதமர் ஜுக்நாத்தை சந்தித்த பின்னர் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமர் ஜுக் நாத்துடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடிய சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் 75 ஆண்டுகளாக தூதரக உறவு இருப்பது மிகவும் சிறப்பானது. ’’ என்று தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் ராவணஹதா, ருத்ரவீணை இசை: மாநாட்டு விருந்தின்போது விருந்தினர் மண்டபத்தில் இந்தியாவின் பாரம்பரிய இசைக் கருவிகளான ருத்ரவீணை, ராவணஹதா போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. முன்னதாக காந்தர்வ ஆராத்யம் குழுவினரின் பாரத் வத்ய தர்ஷசனம் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு இசைக்கலைஞர்கள் ராவணஹதா, ருத்ரவீணை போன்ற இசைக்கருவிகளைக் கொண்டு மிகவும் அற்புதமான கச்சேரியை நடத்தினர்.

அதன் பின்னர் தபேலா, பியானோ போன்ற கருவிகளைக் கொண்டு கலைஞர்கள் இசைக்கச்சேரியை நடத்தினர். இந்துஸ்தானி இசைக் கலைஞர்களின் கச்சேரி மற்றும் கர்நாடக இசைக் கலைஞர்களின் கச்சேரியும் சிறப்பாக நடந்தேறியது. இந்த இசை நிகழ்ச்சிகளை உலக நாடுகளின் தலைவர்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

——–

Related posts