நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினியின் 171-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கமலின் விக்ரம், விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ படங்களை தொடர்ந்து ரஜினியை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் பெற்றுள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.