நாட்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும். அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பது முன்பிள்ளை பருவ அபிவிருத்தி கிடைக்காதமையாகும்.
அதனால் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி முறையாக மாற்றப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
சிறந்த தலைமைத்துவத்துக்காக எதிர்கால சந்ததியினரை கொண்டு செல்லும் நாடுதழுவிய வேலைத்திட்டத்தின் தொடக்க விழா புதன்கிழமை (13) கம்பொல விக்ரமபாகு மத்துய கல்லூரியில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
எமது நாட்டின் பெறுமதிவாய்ந்த வளம் குழந்தை செல்வமாகும். நாங்கள் இதனை விளங்கி செயற்பட வேண்டும். நாங்கள் தற்போது கலந்துரையாட வேண்டி இருப்பது சிறைச்சாலைகளை நிர்மாணிப்பது தொடர்பில் அல்ல.
சிறைச்சாலைகளை மூடிவிடுவதே எமது இலக்காக இருக்கவேண்டும். எமது கல்வி முறைமையில் திரிவுபடுத்தல் இருக்கிறது.
அந்த திரிவு படுத்தலை சரிசெய்யும்வரை சிறைச்சாலைகளை மூடிவிட முடியாது. அதற்காக நாங்கள் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றின் ஊடாக பரிந்துரைகளை முன்வைத்தோம்.
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் மூலம் தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலை என பாடசாலை கட்டமைப்பு திரிவுபடுத்தப்பட்டது.
இந்த நாட்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும். எமது நாட்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பது முன்பிள்ளை பருவ அபிவிருத்தி கிடைக்காதமையாகும். அதனால் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி முறையாக மாற்றப்பட வேண்டும். பிள்ளைகளின் அறிவு அதிகமாக விருத்தியடைவது 6வயது வரையாகும் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று எமது பிள்ளை சந்ததியினரை பாேதைப்பாெருள் பாவனையில் இருந்து பாதுகாத்துக்கொண்டால் சிறைச்சாலைக்கு செல்பவர்களை குறைத்துக்கொள்ள முடியுமாகும்.
மேலும் இலங்கையில் உயர்கல்வி வாய்ப்பை விருத்திசெய்வதற்காக பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எமது நாட்டின் கல்வி முறைமையை மறுசீரமைப்பது தொடர்பில் தேடிப்பார்த்து ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பித்திருக்கிறது.
கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையை பாடசாலையில் 10ஆம் தரத்தில் நடத்துவதற்கும் உயர்தர பரீட்சையை 12ஆம் தரத்தில் நடத்துவதற்கும் பரிந்துரை செய்தோம். தற்போது இருக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நீக்கிவிட்டு, பிரதான 4 அலகுகளுக்கு கீழ் செயற்படும் வகையில் உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை பிரேரித்திருக்கிறோம்.
அதேபோன்று எமது தொழில் கல்விக்கு இருந்து வரும் கேள்வியை அதிகரிப்பதற்காக பல்கலைக்கழக மட்டத்தில் தொழில் கல்வியை அபிவிருத்தி செய்யவும் அறிவு மற்றும் ஞானத்தை அடிப்படையாக்கொண்ட கல்வி முறைமையொன்றுக்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறோம்.
இந்த புதிய கல்வி யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்தாவிட்டால் மேலும் பல வருடங்கள் செல்லும்போது எமது நாட்டின் கல்வி முறைமை நாகரிக உலகுக்கு முகம்கொடுப்பதற்கு பொருத்தம் இல்லாமல்போகும் என்றார்.