எனக்கும், ரஜினிகாந்துக்கும் இடையேயான நட்பு, இதற்கு முன்னதான தலைமுறையில் இல்லை’ என்று கமல்ஹாசன் பேசினார் நடிகர் கமல்ஹாசன் துபாயில் நடந்த திரைப்பட விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார்.
அப்போது கமல்ஹாசன் பேசும்போது, “ரஜினிகாந்த் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
உடனே, ‘என்னங்க..அவர் (ரஜினிகாந்த்) படம் பண்றாரு?…’ என்று கேட்கிறார்கள்.
அப்படி கேட்பவர்களுக்கு அவ்வளவுதான் தெளிவு. எனக்கும், ரஜினிகாந்துக்கும் இடையேயான நட்பு, இதற்கு முன்னதான தலைமுறையில் இல்லை என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
அந்த சவாலை நாம் பின்னோக்கி விட்டதற்கான காரணம், இனி வரமாட்டார்கள் என்ற சாபமாக கொடுக்காமல், இதனை வாழ்த்தாக சொல்லிக்கொள்கிறேன்.
என்னுடைய ரசிகன், என்னுடைய நண்பருக்கு படம் செய்வது என்பது எனக்குத்தானே பெருமை.
அதற்காக கிரிக்கெட் விளையாடும் போது பந்து போட்டால் பேட்டை தூக்கிக்கொண்டு ஸ்டெம்பை காட்டிக்கொண்டு நிற்க மாட்டேன்.
அது விளையாட்டு. தொடர்ந்து நாங்கள் மும்முரமாக போட்டி போடுவோம்.
ஆனால் தடுக்கி விழுவதை நாங்கள் செய்யமாட்டோம். எங்களுக்குள் இருக்கும் அந்த நட்புதான் எங்கள் சினிமா வாழ்க்கையையே வளர்த்தது என்றால் அது மிகையாகாது, என்றார்.