சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவரை ஆணி விழுங்க வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் பொது முகாமையாளர் (பயிற்சி) செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சவுதி தூதரகம் மற்றும் அந்நாட்டு மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்புடன் இந்த விசாரணை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை எல்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான எம்.எஸ் தியாகா செல்வி சவூதி அரேபியாவில் தாம் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாக அத தெரணவிடம் தெரிவித்தார்.
வீட்டு உரிமையாளர்கள் தனக்குள் இரும்பு ஆணிகளை பலவந்தமாக விழுங்க வைத்ததாகவும், அதில் ஒரு ஆணி இன்னும் தனது உடலில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடுமையான சுகவீனமுற்ற நிலையில் சவூதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வைத்தியர் ஒருவரின் நேரடித் தலையீட்டினால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.