நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கு இது குறித்து கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த சட்ட மூலம் தொடர்பில் தனது அவதானிப்புகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
இலங்கை பிரஜைகளின் இணையவெளி பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள மனித உரிமை ஆணைக்குழு உத்தேச சட்டமூலம் குறித்து கேள்விஎழுப்பியுள்ளது.
நிகழ்நிலை செயற்பாடுகள் தொடர்பிலான புதிய குற்றங்களுடன் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தற்போதுள்ள சட்டங்களை நல்லெண்ணத்துடன் விளக்கி செயற்படுத்துவதற்கான சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கான திறனை அதிகரிக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
மன உளைச்சலின் அளவு வேறுபடலாம் அல்லது மற்றும் மிகவும் அகநிலையாகவும் இருக்கலாம் என்பதால் நபர்களிற்கு துன்பகரமானதாக காணப்படும் அறிக்கைகளை குற்றமாக்குவதை இந்த சட்டமூலம் தவிர்க்கவேண்டும்.
அத்தகைய காயத்திற்கான நடவடிக்கைகளை சிவில் நடவடிக்கைகளிடம் விட்டுவிடுவதே சிறந்தது-பாதிக்கப்பட்ட பட்ட நபர் நீதியை கோரலாம்.
உத்;தேச நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவை அதன் அரசியல் சுதந்திரத்தை உறுதிசெய்யும் நியமித்தல் பொறிமுறை மூலம் ஏற்படு;த்தவேண்டும்.எனவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.