பிரிட்டனின் புதிய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட்கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள ரிசி சுனாக் உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மனை பதவியிலிருந்து நீக்கி ஜேம்ஸ் கிலெவெர்லியை அந்த பகுதிக்கு நியமித்துள்ளார்.
2016வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்த டேவிட் கமரூன் புதிய பதவியை ஏற்பதற்காக அவருக்கு பிரபுக்கள் சபையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டேவிட் கேமரூன் கடந்த 2010-2016 முதல் இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டு பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால், பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் பதவி விலகினார்.
அதன்பிறகு கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய பொறுப்புக்கு டேவிட் கேமரூன் வந்துள்ளார். அதேபோல், வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கிளவர்லி, உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.