இலங்கைச் செய்திகளின் தொகுப்பு

மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் முன்னர் வகித்த பதவிகளுக்காக வழங்கப்படும் ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதமொன்றை வழங்கியுள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ இல்லம், வாகனம், பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய சலுகைகளும் நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியின் செயலாளருக்கு வழங்கிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

——-

பொருளாதார ரீதியில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்த தீர்மானங்களையே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் செல்லும் நிலையில், இந்த தீர்மானங்களை உயர்நீதிமன்றம் தவறென்று குறிப்பிடுகிறது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொருளாதார பாதிப்புக்கு நாங்கள் மன்னிப்பு கோர வேண்டுமாயின் ஆட்சியில் இருந்த அனைவரும் களனி விகாரைக்கு சென்று மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

——

எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என்றும் உரிய நேரத்தில் பொருத்தமான வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனது 78ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

——

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 34 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 20 வயதுக்கு மேற்பட்ட குண்டெறிதல் போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த எஸ். மிதுன் ராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

Related posts