சர்வதேச கிரிக்கெட் பேரவை ஶ்ரீலங்கா கிரிக்கட் மீது விதித்துள்ள தடையினால் இலங்கைக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் தொடரின் ஏற்பாட்டாளர் மற்றும் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்நாட்டில் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை இழப்பதாலும் இந்த இழப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி இருதரப்பு கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்ற முடியும் என்ற போதிலும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை இந்நாட்டில் நடத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.