தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் நேற்று நள்ளிரடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரச உயர்மட்டத்தில் ஆலாசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்ரமரத்னவுக்கு ஆரம்பத்தில் தலா மூன்று மாதங்கள் வீதம் இரண்டு தடவையும் பின்னர் தலா மூன்று வாரங்கள் வீதம் இரண்டு தடவையுமாக நான்கு தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இறுதியாக இரண்டு தடவைகள் சேவை நீடிப்புக்கான அனுமதிய அரசியலமைப்பு பேரவையிடத்தில் கோரப்பட்டபோது, பேரவையானது, ஏகமனதாக புதிய பொலிஸ் அதிபரை நியமிக்குமாறு வலியுறுத்தி சேவை நீடிப்புக்கான அனுமதியை வழங்கியிருக்கிவில்லை.
எனினும், தலா மூன்று வாரங்கள் வீதம் சி.டி.விக்கிரமரட்னவுக்கு பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது பதவிக்கால் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், தான் தேசபந்து தென்னக்கோனை புதிய பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. புதிய பொலிஸ் அதிபர் பதவிக்கான நியமனத்துக்கு தகுதி உடையவர்களாக லலித் பதிநாயக்க மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரும் உள்ளமையால் இப்போது யாரை நியமிப்பது என்பதில் சற்று குழப்பமான நிலைமைகள் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.