யாழ் மறைமாவட்ட ஆயருடன் உலக தமிழர் பேரவையினர் இன்று சனிக்கிழமை (9) சந்திப்பொன்றை யாழ் ஆயர் இல்லத்தில் முன்னெடுத்திருந்தனர்.
ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும், சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளைமையப்படுத்திய ‘இமயமலைப் ‘ பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் வெள்ளிக்கிழமை (8) கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பௌத்த தேரர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கிய சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய ஒருங்கிணைந்த தரப்பினருடனான சந்திப்பின் பின்னரேயே குறித்த பிரகடனம் கையளிக்கப்பட்டது.
இதையடுத்து யாழ் மறைமாவட்ட ஆயருடன் உலக தமிழர் பேரவையினர் இன்று சனிக்கிழமை (9) சந்திப்பொன்றை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.