அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கமரூன் கிறீன் தான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது தாய் கர்ப்பமாகயிருந்த காலத்திலேயே தான் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது மகன் 12 வயதிற்கு மேல் உயிர்பிழைப்பானா என்ற சந்தேகம் ஒரு காலத்தில் நிலவியது என கமரூன் கிறீனின் தந்தை ஹரி தெரிவித்துள்ளார்.
2022 இல் டி 20 போட்டிகளில் விளையாட ஆரம்பித்த கிறீன் அவுஸ்திரேலியாவிற்காக மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடி வருகின்றார் உலககிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் கிறீன் இடம்பெற்றிருந்தார்.
நான் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் என அறிந்ததும் எனது பெற்றோர் அதிர்;ச்சி அடைந்தனர் என கிறீன் சனல் 7க்கு தெரிவித்துள்ளார்.
நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதற்கான அறிகுறிஎதுவும் இருக்கவில்லைஅல்டிரா சவுன்ட் சோதனை மூலமே இது தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
நாள்பட்ட சிறுநீரகநோய் உங்கள் உடல்நலத்தில் பாதிப்பைஏற்படுத்தலாம் துரதிஸ்டவசமாக என்னுடைய சிறுநீரகம் ஏனையவர்களின் சிறுநீரகங்கள் போல செயற்படுவதில்லை என அவர்தெரிவித்துள்ளார்.
எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் நான் நோயை சிறப்பாக கையாண்டுள்ளேன் கடந்த வருடம் நியுசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போதுமாத்திரம் பிரச்சினை ஏற்பட்டது என கிறீன் தெரிவித்துள்ளார்
89 ஓட்டங்களை பெற்ற பின்னர் ஐந்து ஓவர்கள் பந்து வீசிய பின்னர் கால் தசைப்பிடிப்பினால் கிறீன் பாதிக்கப்பட்டார் நான் ஒழுங்காகநீர் அருந்தாதே காரணம் என நினைத்தேன் ஆனால் சிறுநீரக பாதிப்பே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் அன்று நீண்டநேரம் துடுப்பெடுத்தாடினே; பந்து வீசினேன் அதன் பின்னர் தசைப்பிடிப்பு ஏற்பட்டது என குறிப்பி;ட்டுள்ள கமரூன் கிறீன் எனது நோயே அதற்கு காரணம் என்பதை நான் உணர்வதற்கு நீண்டநேரம் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.