கடந்த 10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 25 வீதத்தால் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது.
இதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 365,762 ஆகவும், 2022இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 275,321 ஆகவும் உள்ளது.
2014இல் 349,744 பிறப்புகள், 2015இல் 336,097, 2016இல் 329,630, 2027இல் 326,052, 2018இல் 328,112 மற்றும் 2019இல் 319,010 மற்றும் 2020இல் 284,284 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.