ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ திரைப்படம் 17 நாட்களில் ரூ.835 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் விரைவில் ரூ.900 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ப்ரீதம், விஷால் மிஸ்ரா, மனன் பரத்வாஜ், ஷ்ரேயாஸ் பூரணிக், ஜானி, ஆஷிம் கெம்சன் உள்ளிட்டோர் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தந்தை – மகன் உறவைப் பேசும் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஆணாதிக்க அம்சங்கள் நிறைந்த டாக்சிக் படம் என்றும் பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.
படம் முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், படம் வெளியாகி 17 நாட்கள் கடந்த நிலையில், உலகம் முழுவதும் ரூ.835 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் அதிக வசூலை ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.