250 பேர் வாகனங்களைச் செலுத்த தகுதியற்றவர்கள்..

பல்வேறு தவறுகளுக்காக பொலிஸ் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களினால் கடந்த வருடம் மருத்துவ பரிசோதனைக்காக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட சாரதிகளில் 250 பேர் வாகனம் செலுத்த தகுதியற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டுக்கான செயல்திறன் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 3,989 சாரதிகள் பல்வேறு தவறுகளால் மருத்துவ பரிசோதனைக்காக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் அனுப்பப்பட்டனர்.

இவர்களில் 250 பேர் வாகனம் செலுத்துவதற்கு உடல் மற்றும் மனத் தகுதி இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, இவர்கள் வாகனம் செலுத்துவதற்கு மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

Related posts