கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எம்மிடம் இருந்து விலகி நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், திருப்தி யோடும் வாழ இறைவன் எங்களுக்கு அருள வேண்டும் என கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

கிறிஸ்து பிறப்பு விழா என்பது இறை மகன் இயேசு இவ் உலகில் மனிதனாக கன்னிமரியாவுக்கு பிறந்த அந்த நாளை கொண்டாடும் ஒரு தினமாக உள்ளது.

கிறிஸ்து இவ் உலகில் பிறந்து இறைவனால் இறக்கத்தையும், அன்பையும் இவ் உலகிற்கு கொண்டு வந்தார். அதை போலவே இவ் உலகில் அமைதி நிலவ வேண்டும். நீதி இருக்க வேண்டும், உண்மைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசித்தார்.

கிறிஸ்து பிறப்பு விழா எங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விழா.அயினும் இலங்கை நாட்டிலே மக்கள் பல வகையில் கஷ்டப்படுகிறார்கள். விலைவாசி கூடியிருக்கிற நிலையில் அவர்கள் வழமையாக வாங்கக்கூடிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

சில குடும்பங்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாமல் ஒரு வேளை மாத்திரம் சாப்பிடுகின்றனர்.

எனவே தான் இறை இயேசுவின் வருகையினால் மக்கள் இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும்.

அவர்கள் இதையும் விட ஒரு நல்ல வாழ்வு வாழக்கூடியதாக வளம் பெற வேண்டும் என்றும் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எம்மிடம் இருந்து விலகி நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், திருப்தியோடும் வாழ இறைவன் எங்களுக்கு அருள வேண்டும் என இந்த நத்தார் தினத்தில் விசேடமாக நாங்கள் வாழ்த்துகிறோம்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்தார்.

Related posts