அலையன்ஸ் ஃபிரான்சைஸ் இயக்குநர் பாட்ரிசியா தெரிஹார்ட் முன்னிலையில் சென்னையில் உள்ள பிரான்ஸ் துணைத்தூதர் டால்போட்பாரே, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
இதில் ஐசிஏஎஃப் தலைவர் கண்ணன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜ் இதுபற்றி கூறும்போது, “4 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழாவின் 28-வது பதிப்பை ஏற்பாடு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்தப் பதிப்பை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற காத்திருக்கிறோம்” என்றார்.
முதல் நாளில் அலைஸ் டியோப் இயக்கிய ‘செயின்ட் ஓமர்’ என்ற பிரெஞ்சு படம் திரையிடப்பட இருக்கிறது