அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுதாக்கல் செய்துள்ளது.
இன்று உயர்நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்துமபண்டார மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்கட்சிகளிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.இந்த சட்டமூலத்தை நாட்டில் பயங்கரவாதம் நிலவாத ஒரு காலப்பகுதியில் தேர்தல் காலப்பகுதியில் சமர்ப்பித்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் பயங்கரவாதம் என்றால் என்னவென தெளிவாக வரைவிலக்கணம் செய்யவில்லை ஆராயவில்லை எவரும் கைதுசெய்யப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த சட்டமூலத்தை நாட்டில் பயங்கரவாதம் நிலவாத ஒரு காலப்பகுதியில் தேர்தல் காலப்பகுதியில் சமர்ப்பித்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் பயங்கரவாதம் என்றால் என்னவென தெளிவாக வரைவிலக்கணம் செய்யவில்லை ஆராயவில்லை எவரும் கைதுசெய்யப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வேளையில் அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்காக ஜனநாயகத்தை முடக்குவதற்காக இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன இதன் காரணமாகவே நாங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.தேர்தல்ஆண்டில் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தையும் சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தினையும் கொண்டுவருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.