எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கு அல்லது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பலமான காரணியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் சிறுபான்மை கட்சிகளின் வாக்கு வீதம் 31 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தமிழ் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கும் விதத்தை கருத்திற்கொண்டு பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் இந்த சில விடயங்களை பொறுத்தே அமையும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலைமைகள் வடக்கு கிழக்கிலும், மலையகத்தில் உள்ள அரசியல் தலைமைகளுடன் நிறைய மாறலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் சமமாக இருக்கும்.
அண்மையில் முடிவடைந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் ஸ்ரீதரனின் வெற்றி குறித்து இலங்கையின் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்தனர்.
எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராகவும் இருப்பார் என பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருவதே இதற்குக் காரணம்.