காலிமுகத் திடலில் இன்று (04) இடம்பெற்ற இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு இறுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.
இராணுவ அணிவகுப்புக்குப் பின்னரான வழமையான கலாசார அணிவகுப்பு இம்முறை இடம்பெறாததுடன், இலங்கையின் சகல கலாசாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சுதந்திர விழாவில் குறுகிய கலாசார அணிவகுப்பு மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியி;ல் பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவரும் அதேவேளை நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்களே கைதுசெய்யப்பட்டு;ள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடு சந்தியிலிருந்து யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம் இன்று ஆரம்பமானது.
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றைய தினம் (04) அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் கறுப்பு தின போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்றைய நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தன. அதன் அடிப்படையிலேயே இந்த கறுப்பு தின போராட்டம் இடம்பெறுகிறது.
இந்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், பொதுமக்கள், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் என்பன இணைந்து பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.